என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்தது"

    • தறிகெட்டு ஓடியதால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா பகுதியை சேர்ந்தவர் குமரவேல் (வயது 35), கார் டிரைவர்.

    இவர் நேற்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு தனது காரில் 3 பேரை ஏற்றிக்கொண்டு மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்றார். சாமி தரிசனம் முடித்துவிட்டு இன்று காலை குமரவேல் காரில், 3 பேரையும் ஏற்றிக்கொண்டு பள்ளிகொண்டா நோக்கி சென்றனர்.

    அணைக்கட்டு அடுத்த கன்னிகாபுரம் அருகே சென்றபோது, கார் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்தது. தறிக்கெட்டு சாலையில் ஓடிய கார் அந்த வழியாக நடந்துசென்ற 2 பேர் மீது மோதியது.

    இந்த கோரவிபத்தில் சாலையில் நடந்துசென்ற கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த ரங்கசாமி(55), ஊனை பள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்த தயாளன் மகன் ஆறுஅமுதன் (13) ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இறந்தவர்கள் 2 பேரில் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்துபோன முதியவர் ரங்கசாமி கூலி வேலை செய்துவந்தார்.

    சிறுவன் ஆறுஅமுதன் அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்ப ள்ளியில் 7-ம் வகுப்பு படித்துவந்தான். கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×