என் மலர்
நீங்கள் தேடியது "சிற்றுண்டி உணவகம்"
- விதிமுறைகளுக்குட்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் ஆர்வம் மற்றும் முன் அனுபவம்
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கன்னியாகுமரி மாவட்ட இயக்க மேலாண்மையின் கீழ் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறுதானிய சிற்றுண்டி உணவகம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான விதிமுறைகளுக்குட்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பயனாளிகள் கண்டிப்பாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு தொடங்கப்பட்டு குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் முடிவுற்றிருக்க வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். கூட்டமைப்பாக இருக்கும் பட்சத்தில் தர மதிப்பீடு செய்யப்பட்டு ஏ அல்லது பி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
உற்பத்தியாளர் குழுவாக இருக்கும் பட்சத்தில் தர மதிப்பீடு செய்யப்பட்டு திட்ட நிதி பெறப்பட்டிருக்க வேண் டும். மகளிர் சுய உதவிக்குழு, உற்பத்தியாளர் குழு, கூட்டமைப்பு சிறு தானிய உணவு உற்பத்தி மற்றும், சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் ஆர்வம் மற்றும் முன் அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும்.
குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள அல்லது அதனை சுற்றியுள்ள ஊராட்சியின் மகளிர் சுய உதவிக்குழு, உறபத்தியாளர் குழு, கூட்டமைப்பு ஆக இருத்தல் வேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிற்றுண்டி நடத்திட ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள் வருகிற 17-ந் தேதி மாலை 4 மணிக்குள் இணை இயக்குநர் (அல்லது) திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக இணைப்பு கட்டிடம் (2-வது தளம்), கன்னியாகுமரி மாவட்டம், (இ) நாகர் கோவில்-629001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.






