என் மலர்
நீங்கள் தேடியது "பொக்லைன் ஏந்திரத்தில் சுவரை இடித்து தள்ளினர்"
- புறம்போக்கு இடத்தில் 4 அடி அளவில் ஆக்கிரமிப்பு
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வெம்பாக்கம்:
தூசி அடுத்த மகாஜனம்பாக்கத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்கள் கல்லாங் குத்து பகுதியில் புறம்போக்கு இடத்தில் 4 அடியில் சுற்றி சுவர் எழுப்பி உள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்தவர்கள் கருணாநிதி, வெங்கடேசன், ராஜேஷ், கார்த்திக். கருணாநிதிக்கு கல்லாங்குத்து பகுதியில் இடம் ஒன்று உள்ளது. அந்த இடத்தில் முருகன் 4 அடி அளவில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கருணாநிதி உள்ளிட்ட தரப்பினர் முருகன், மகேஸ்வரியிடம் சென்று எங்களுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளாய் என்று கூறி அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கருணாநிதி பொக்லைன் ஏந்திரம் வரவழைத்து எழுப்பிய சுவரை பிடித்து தள்ளினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த கருணாநிதி, வெங்கடேசன், ராஜேஷ், கார்த்தி ஆகியோர் கணவன், மனைவி இருவரையும் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மகேஸ்வரி தூசி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கருணாநிதி, வெங்கடேசன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






