என் மலர்
நீங்கள் தேடியது "கார் மோதி கவிழ்ந்தது"
- நேற்று இரவு அந்த வழியாக வந்த ஒரு கார் திடீரென தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்தது.
- அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு எந்தவித காயும் ஏற்படவில்லை.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உழவர் சந்தை சாலையில், கோர்ட், தாலுக்கா அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியவை உள்ளன. எப்போதும் மிகவும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையின் நடுவே தடுப்பு சுவர் உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு அந்த வழியாக வந்த ஒரு கார் திடீரென தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்தது. இதைக் கண்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் அங்கு சென்று, காரின் உள்ளே இருந்த 3 வாலிபர்களை மீட்டனர்.
அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு எந்தவித காயும் ஏற்படவில்லை. மேலும் பொதுமக்கள் உதவியுடன் கார், தூக்கி நிறுத்தப்பட்டது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி மற்றும் பக்கவாட்டில் சேதம் ஏற்பட்டது. இது குறித்து விசாரித்தபோது, பெங்களூரு எச்.எஸ்.ஆர் லே அவுட் பகுதியை சேர்ந்த சாப்ட்வேட் எஞ்சினியர் ரேவந்த், அவரது நண்பர் அபிஷேக், ஆகிய இருவரும் தங்கள் நண்பர் ஒருவரை ஒசூர் ரெயில் நிலையத்தில், திருப்பூருக்கு ரெயிலில் ஏற்றிவிட்டு, மீண்டும் பெங்களூரு திரும்பும்போது இந்த விபத்து நிகழ்ந்திருப்பது தெரிய வந்தது.
இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.






