என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் மாற்றம்"

    • சமூக வலைதளங்களில் வைரலானது
    • போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் சாராய வியாபாரி ஒருவரிடம் உளவுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், 'தனக்கு தினமும் ஆயிரம் ரூபாய் தர வேண்டும். 4 அல்லது 5 நாளைக்கு ஒருமுறை மொத்தமாக கொடுத்திடு.

    யார் பிடிச்சாலும் என் பெயரை சொல்லக்கூடாது' என்று பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த ஆடியோ விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சாராய வியாபாரியிடம் பேசியது திருப்பத்தூர் உளவுத்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் என்பது தெரியவந்தது.

    இதனையடுத்து ரங்கநாதனிடம், வேலூர் உளவுத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் 3 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ரங்கநாதனை, வேலூர் உளவுதுறை அலுவலகத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

    இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×