என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிக்கித் திணறும் வாகனங்கள்"

    • எப்பொழுதெல்லாம் சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறதோ அந்த சமயங்களில் விரிவாக்கம் செய்யப்பட்ட சாலைகளில் திடீர் ஆக்கிரமிப்பு கடைகள் முளைப்பது வாடிக்கையாக உள்ளது.
    • மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள உணவகங்களில் உணவருந்த வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை பிரதான சாலைகளில் நிறுத்துவதால் ஆம்புலன்ஸ் கூட சில நேரங்களில் செல்ல முடியாத நிலை உள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் ஏரிச்சாலை முதல் வெள்ளி நீர்வீழ்ச்சி வரை சாலை ஆக்கிரமிப்புகளால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். எப்பொழுதெல்லாம் சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறதோ அந்த சமயங்களில் விரிவாக்கம் செய்யப்பட்ட சாலைகளில் திடீர் ஆக்கிரமிப்பு கடைகள் முளைப்பது வாடிக்கையாக உள்ளது.

    வார விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் இந்த சாலைகளை கடப்பதில் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஏரி பாலம் அருகே தொடங்கும் சாலைகளில் ஆரம்பித்து வெள்ளி நீர்வீழ்ச்சி வரை விரிவாக்கம் செய்யப்பட்ட சாலைகள் எங்கே என தேடும் நிலை உள்ளது.

    ஒவ்வொரு வார விடுமுறை நாட்களிலும் சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களில் உகாத்தே நகர் முதல் ஏரி பாலம் அருகே செல்லும் வரை கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர். மூஞ்சிக்கல் பிரதான சாலையில் பயணிப்போர் படும் இன்னலுக்கு அளவே இல்லை. மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள உணவகங்களில் உணவருந்த வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை பிரதான சாலைகளில் நிறுத்துவதால் ஆம்புலன்ஸ் கூட சில நேரங்களில் செல்ல முடியாத நிலை உள்ளது.

    இதேபோல் இரவு போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா பயணிகள் வாகனத்தால் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மூஞ்சிக்கல் பகுதியில் இருந்து அரசு மேல்நிலைப்பள்ளி பஸ் நிறுத்தம் வரை இருபுறமும் கனரக வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்தப்படுவதால் பிரதான நெடுஞ்சாலைகளிலேயே பள்ளி மாணவ - மாணவிகளும், பொது மக்களும் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதே போல் நகரின் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பு மற்றும் சேதமடைந்த சாலைகளால் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×