என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர்கள் வாக்குவாதம்"

    • கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் உள்பகுதி யில் மேளம் இசைக்க அனுமதியில்லை என அறிவிப்பு செய்யப்பட்டது.
    • கோவில் உள்பகுதியில் மேளம் இசைத்து பக்தர்கள ஆட முற்பட்டபோது ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பழனி:

    பழனி முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து வரும் பக்தர்கள், அலகு குத்தி வரும் பக்தர்கள் அடிவாரம் திருஆவினன்குடி கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்பே மலைக்கோவி லுக்கு செல்கின்றனர். அதேபோல் தைப்பூசம், பங்குனி உத்திர திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து திருஆவினன்குடியில் வைத்து காவடி ஆட்டம் ஆடுவது வழக்கம்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் வளாக பகுதியில் மேளம் இசைப்பது தொடர்பாக இரு பக்தர்கள் குழு இடையே பிரச்சினை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் உள்பகுதி யில் மேளம் இசைக்க அனுமதியில்லை என அறிவிப்பு செய்யப்பட்டது.

    இந்நிலையில் கோவை பகுதியை சேர்ந்த பக்தர்கள் காவடி எடுத்து திருஆவினன்குடிக்கு வந்தனர். பின்னர் கோவில் உள்பகுதியில் மேளம் இசைத்து ஆட முற்பட்டனர். ஆனால் அங்கிருந்த அதிகாரிகள் தரப்பில் கோவில் வளாகத்தில் ஆடக்கூடாது என தெரிவித்தனர்.

    இதற்கு சில பக்தர்கள் கோவில் அதிகாரி களிடம் வாக்குவாத த்தில் ஈடுபட்டனர். தகவல றிந்த பழனி அடிவாரம் போலீசார் சம்பவ இடத்து க்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து பக்தர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    ×