என் மலர்
நீங்கள் தேடியது "சீர் வரிசை"
- புதுக்கோட்டை மாங்காட்டில் 15 மாட்டு வண்டிகளில் தாய் மாமன் சீர் வரிசை வந்தது
- பாரம்பரியம் மாறாத பாசம் என பொதுமக்கள் வியப்பு
ஆலங்குடி,
தமிழக கிராமங்களில் குழந்தைகள் காது குத்து, பூப்பெய்தல் என்றாலே பரிசு பொருட்கள், மொய் வைப்பது வழக்கம். குறிப்பாக தாய்மாமன் சீர் வரிசை எவ்வளவு என்று ஆர்வமாக பார்ப்பார்கள். தாய்மாமன் சீர் வரிசை என்பது முக்கிய கௌரவம் என்பதால், சீர் வரிசை தட்டுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். சீர்வரிசை தட்டுகளை உறவின, ஊர்கார பெண்கள் சுமந்து ஊர்வலமாக எடுத்து வருவது வழக்கம். ஆனால் மாட்டுவண்டியில் சீர்வரிசை பொருட்களை எடுத்து வந்தது அனைவரையும் திரும்பி பார்க்க செய்துள்ளது.
ஆலங்குடி அருகே மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா. இவரின் மனைவி நவநீதா. என்ஜினீயரான இளையராஜா குழந்தைகளுக்கு மாங்காடு மாரியம்மன் கோயில் மண்டபத்தில் காதணி விழா நடைபெற்றது. இவர்களது உறவினர்களான ஆண்டவராயபுரம் பகுதியைச் சேர்ந்த மாயழகு குடும்பத்தினர் மாமன் சீர்வரிசை கொண்டு வந்தனர். பாரம்பரிய முறைப்படி தாம்பூல தட்டுகளில் சீர் வரிசையை, 21 மாட்டு வண்டிகளில் எடுத்துக்கொண்டு, உறவினர்கள் புடைசூழ மேளதாளங்கள், வாண வேடிக்கைகள் முழங்க ஊர்வலமாக வந்தனர். இவ்வாறு 3 கிமீ தூரம் மாமன் சீர் வரிசை ஊர்வலம் நடைபெற்றது. 21 மாட்டு வண்டிகளில் சீர்வரிசை கொண்டு செல்லப்பட்டதை அப்பகுதி மக்கள் வியப்பாக பார்த்து பாரம்பரியம் மாறாத பாசம் என்று பொதுமக்கள் வியப்படைந்தனர்.






