என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை இருபக்கத்திலும் மக்கி துர்நாற்றம்"

    • ேநாய் பரவும் அபாயம்
    • அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    செங்கம்:

    செங்கம் நகரில் பல்வேறு காய்கறி மற்றும் பழ வகைகள் விற்பனை செய்யும் கடைகள், நடமாடும் ஆட்டோகளில் காய்கறி விற்பனை மற்றும் நடமாடும் பழக்கடைகள் அதிக அளவில் செயல்படுகிறது.

    செங்கம்- போளூர் தேசிய நெடுஞ்சாலையில் மில்லத் நகர் முதல் தொடங்கி குயிலம் கூட்ரோடு, நீதிமன்றம் செல்லும் ரோடு, போளூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறமும் கெட்டுப்போன காய்கறிகள், பழ வகைகளை சாலையின் 2 பக்கமும் வியாபாரிகள் கொட்டி விட்டு செல்கின்றனர்.

    அதேபோல மக்கிய நிலையில் குப்பைகள், கோழி மற்றும் ஆட்டு இறைச்சி கழிவுகள் சாலை ஒரங்களில் கொட்டிச் செல்கின்றனர். இதனால் குப்பைகள் சாலை இருபக்கத்திலும் மக்கி துர்நாற்றம் வீசுகிறது.

    குறிப்பாக மழை நேரங்களில் துர்நாற்றம் அதிக அளவு வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்படுகிறது.

    குப்பைகள், கெட்டுப்போன காய்கறிகள் பழ வகைகள், இறைச்சி கழிவுகள் சாலையின் இரு புறங்களிலும் கொட்டுவதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குப்பைகளை சாலையின் ஒரங்களில் வீசி செல்வோர் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும் எனவு வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×