என் மலர்
நீங்கள் தேடியது "namakkaldistrict 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் Anointed with 18 kinds of perfumes"
- மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
- விநாயகப் பெருமான் மற்றும் பரிவார தெய்வங் களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
பரமத்திவேலூர்
சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடை யாரில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப் பண்ணசாமி கோவிலில் உள்ள விநாயகர், கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள விநாயகருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் ,திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமான் மற்றும் பரிவார தெய்வங் களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
அதேபோல் பரமத்திவேலூர் பஞ்சமுக விநாயகர், பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள விநாயகர் , பாண்டமங்கலம் விநாயகர், ,ஆனங்கூர் விநாயகர், அய்யம் பாளையம் விநாயகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள்பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.






