என் மலர்
நீங்கள் தேடியது "namakkaldistrict :சேலம் வாலிபர் உள்பட 3 பேரை பிடிக்க வேட்டை Hunt to catch 3 people including Salem youth"
- சம்பவத்தன்று இவரது கடைக்கு மர்ம நபர்கள் 3 பேர் சென்றனர்.
- பயந்து போன செல்லத்துரை இந்த சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லவில்லை
நாமக்கல்:
நாமக்கல் பரமத்தி ரோடு இ.பி. ஆபிஸ் பின்புறம் வசித்து வருபவர் செல்ல துரை (வயது 52). இவர் நாமக்கல் பொய்கேரிக்கரை ரோடு பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இவரது கடைக்கு மர்ம நபர்கள் 3 பேர் சென்றனர். அவர்கள் தாங்கள் கியூ பிரான்ச் போலீஸ் என்றும், உங்களிடம் அதிக அளவில் பணம் உள்ளதாக புகார் வந்துள்ளது எனவும், பணத்தை கொடுக்காவிட்டால் குண்டர் சட்டத்தில் கைது செய்து விடுவதாகவும் மிரட்டினர்.
இதனால் பயந்து போன செல்லத்துரை அவர்களை வங்கிக்கு அழைத்து சென்று ரூ.3 லட்சத்தை எடுத்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் பயந்து போன செல்லத்துரை இந்த சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லவில்லை.
இதனிடையே அவரது மகள், போலீசுக்கு சொன்ன தகவலின்பேரில் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதில், போலீஸ் என ஏமாற்றி ரூ.3 லட்சத்தை பறித்து சென்ற நபர்கள், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த சபரி என்ற சபரிநாதன் (39), சேலம் ஏற்காடு மெயின் ரோடு கோரிமேடு பகுதி யைச் சேர்ந்த இலியாஸ் (38), திருச்செங்கோடு இழுப்புலி பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன் (33) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
தலை மறைவான அவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகி றார்கள். போலீசார் என கூறி டீக்கடை உரிமை யாளரிடம் ரூ.3 லட்சத்தை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






