என் மலர்
நீங்கள் தேடியது "இலவச உணவு வழங்க தடை"
- பசியை போக்குவதற்காக தொண்டு நிறுவனங்கள் தரமான முறையில் உணவு சமைத்து ஒரு நாளைக்கு 200 முதல் 300 பேருக்கு வழங்கி வருகின்றனர்.
- இரண்டு நாட்களுக்கு முன்பு தருமபுரியில் உள்ள தன்னார்வலர்கள் வழங்கிய உணவு 70 பேருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தி மயக்கம் அடைந்துள்ளனர்.
தருமபுரி,
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சேலம்- தருமபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரத்திற்கு மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
மேலும் மருத்துவமனையில் 1200 படுக்கை வசதிகளுடன் உள்ளிருப்பு நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வசதிகள் உள்ளது. இந்த நிலையில் உள்ளிருப்பு நோயாளிகளின் உடன் வரும் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் தங்கி வருகின்றனர்.
வசதியற்ற நோயாளிகளும் இருப்பதால் இவர்களுடைய பசியை போக்குவதற்காக தொண்டு நிறுவனங்கள் தரமான முறையில் உணவு சமைத்து ஒரு நாளைக்கு 200 முதல் 300 பேருக்கு வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தருமபுரியில் உள்ள தன்னார்வலர்கள் வழங்கிய உணவு 70 பேருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தி மயக்கம் அடைந்துள்ளனர். உடனடியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ நிர்வாகம் 70 பேருக்கும் சிகிச்சை அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதில் நேற்று முன்தினம் எழுவது பேரில் 30 பேர் சிகிச்சை பெற்று சென்றுள்ளதாகவும் 40 பேர் சிகிச்சை பெற்று வருதாகவும் தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து மருத்துவமனை நிர்வாகம் தொண்டு நிறுவனங்களுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள் உணவுகளை வழங்கக் கூடாது என தடை செய்துள்ளது.
சில தன்னார்வ அமைப்புகள் தருமபுரியில் நடைபெற்று வரும் கல்யாணம், காதுகுத்து, கருமாதி, சடங்கு, கோவில் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நடைபெறும் விருந்துக்களில் பரிமாறப்பட்டு மீதியாகும் சைவ, அசைவ உணவுகளை தன்னார்வ அமைப்புகள் அதனை பெற்று வந்து மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கும் நோயாளி களின் உறவினர்களுக்கும் வழங்கி வந்துள்ளது.
இதனை வாங்கி உண்ணும் நோயாளிகளும் நோயாளி களின் உறவினர்களும் இலைகளையும் மீதியாகும் உணவுகளையும் வளாக்கத்திற்குள்ளே வீசி எரிவதால் மருத்து வமனைக்குள் குப்பை நிறைந்து சுகாதாரமின்றி அசுத்தத்தை ஏற்படுத்தி வந்துள்ளனர்.






