என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்.எல்.சி.க்கு நிலம்"

    • மாவட்ட செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் அன்புமணி எச்சரிக்கை
    • மாவட்ட செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கடலூர்:

    என்.எல்.சி. நிறுவன சுரங்கப்பணிகளினால் நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன், நிலத்தடி நீர், சுற்றுச்சூழல், விவசாயம் ஆகியவை பெரும் பாதிப்பு ஏற்படுவதாக பா.ம.க.சார்பில் குற்றம்சாட்டி, இதற்காக நடைபயணம், கருத்தரங்கம், ஆர்ப்பாட்டங்கள் என பல கட்ட எதிர்ப்புகளை தெ ரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், டாக்டர்.அன்புமணிராமதாஸ் ஒருங்கிணைந்த கடலுார் மாவட்ட செயலாளர்கள் நெய்வேலி கோ.ஜெகன், கடலுார் முத்துகிருஷ்ணன், விரு த்தாசலம் கார்த்திகேயன், புவனகிரி செல்வ.மகேஷ் ஆகியோரை சென்னைக்கு நேரில் அழைத்து ஆலோசனை செய்து. மாவட்ட செயலாளர்களுடன் சென்றி ருந்த விவசாயிகளிடம் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். அப்போது என்.எல்.சி சுரங்க நிர்வாகத்தினர் அவ்வப்போது மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரோடு நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபவதாக தெரிவித்தனர். அதற்கு அன்புமணிராமதாஸ் இது போன்று செயல்களில் என்.எல்.சி. ஈடுபவதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்றும், இதனை மீறி செயல்பட்டால், தானே நேரில் வந்து போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட நேரிடும் எனவும், இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால், கடலுார் மாவட்ட நிர்வாகம் தான் பொறுப்பு எனக்கூறியும், இது குறித்து மாவட்ட கலெக்டருக்கும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தெரிவிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக ஒருங்கிணைந்தபா.ம.க. மாவட்ட செயலாளர்கள் மாவட்டகலெக்டரையும், போலீஸ் சூப்பிரண்டையும் சந்தித்து அன்புமணியின் கோரிக்கையை வலியுறுத்த உள்ளனர். இதில் கடலுார் வடக்கு மாவட்ட வன்னியர் சங்க தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் கார்த்திகேயன், என்ஜினீயர் வீர.அரவிந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×