என் மலர்
நீங்கள் தேடியது "நீர் மூழ்கி பலி"
- தண்ணீரில் மூழ்கிய லெனின் நாகக்குமார் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.
- தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் லெனின் நாகக்குமாரின் பிணத்தை மீட்டனர்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம், மச்சிலி பட்டினத்தை சேர்ந்தவர் லெனின் நாகக்குமார் (வயது 23). மச்சிலி பட்டினத்தில் பட்ட படிப்பை முடித்த இவர் மேற்படிப்புக்காக கடந்த 2021-ம் ஆண்டு கனடா நாட்டிற்கு சென்றார்.
அங்குள்ள லேக் அவுட் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் தங்கியுள்ள இடத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சில்வர் நீர்வீழ்ச்சிக்கு 3 நண்பர்களுடன் சென்றார்.
தங்களது நண்பர்களுடன் நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டு இருந்தபோது திடீரென லெனின் நாகக்குமார் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினர். அவரை மீட்க அவரது நண்பர்கள் நீண்ட நேரம் போராடினர்.
தண்ணீரில் மூழ்கிய லெனின் நாகக்குமார் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னர் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் லெனின் நாகக்குமாரின் பிணத்தை மீட்டனர்.
இந்த சம்பவம் அவரது சொந்த ஊரில் சோகத்தை ஏற்படுத்தியது.






