என் மலர்
நீங்கள் தேடியது "சுதந்திரப் போராட்ட தியாகி"
- கடலூர் கருவூலத்துறை மூலம் 104 வயது சுதந்திர போராட்ட தியாகி ஏகாம்பரத்திற்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது.
- இளநிலை உதவியாளர் பசுபதி தலைமையில் அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
கடலூர்:
அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெறும் நபர்கள், அவர்கள் இறந்த பிறகு அவரது மனைவி மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அரசின் சார்பாக ஓய்வூதியம் கருவூலத்துறை மூலமாக வழங்கப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக வருடந்தோறும் ஓய்வூதியம் பெறும் சுதந்திர போராட்ட தியாகிகள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் இறந்த பிறகு அவரது மனைவிகள் ஒவ்வொரு ஆண்டும் கருவூலத்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று நேர்காணலில் பங்கேற்று வருகின்றனர். இந்த பதிவு செய்து வருவதன் மூலம் அவர்களுக்கு தொடர்ந்து ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஓய்வூதிய பெறும் நபர்கள் கருவூலத்துறைக்கு நேரில் வந்து நேர்காணலில் கலந்து கொள்ளலாம் அல்லது பல்வேறு வசதிகள் ஓய்வவூதியர்களுக்கு ஏற்படுத்தி அதன் மூலம் தாங்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலூர் கருவூலத்துறை மூலம் 104 வயது சுதந்திர போராட்ட தியாகி ஏகாம்பரத்திற்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து உதவி கருவூல அலுவலர் அலெக்சாண்டர் அறிவுறுத்தலின் பேரில் இளநிலை உதவியாளர் பசுபதி, கணக்காளர்கள் ராஜேஸ்வரி, ஜெயபாரதி மணிமேகலை ஆகியோர் கடலூர் கருமாரபேட்டையில் வசித்து வரும் 104 வயது கொண்ட சுதந்திர போராட்ட தியாகி ஏகாம்பரம் வீட்டிற்கு நேரில் சென்றனர்.
பின்னர் இளநிலை உதவியாளர் பசுபதி தலைமையில் அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அவரிடம் கைரேகை மற்றும் முகத்தை ஜீவன் பிரம்மா செயலி மூலம் பதிவு செய்து கொண்டு நேர்காணல் நடத்தி உறுதிப்படுத்தினர். இதனை தொடர்ந்து அவருக்கு கிடைக்க கூடிய ஓய்வூதியம் தொடர்ந்து வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 104 வயது சுதந்திரப் போராட்ட தியாகி ஏகாம்பரத்திற்கு எந்தவித சிரமம் ஏற்படாத வகையில் வீட்டிற்கு கருவூலத்துறை ஊழியர்கள் நேரில் சென்று பொன்னாடை அணிவித்து உரிய மரியாதை செலுத்தி அவருக்கு கிடைக்க கூடிய ஓய்வூதியம் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.






