என் மலர்
நீங்கள் தேடியது "காவலர்கள் எதிர்பார்ப்பு"
- மாற்று பணியில் உள்ள போலீசார், இப்பணிக்காக பயன்படுத்த ப்பட்டு வருவதால், போலீசாரின் பணிச்சுமை அதிகமாக இருந்து வருகிறது.
- போலீசாரின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலக்தை யொட்டி சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஊத்தங்கரை ஆண்கள் கிளைச்சிறை இயங்கிவந்தது.
இந்த கிளைச்சிறையில் சிறை கண்காணிப்பாளர் உட்பட 10 காவலர்கள் பணிபுரிந்து வந்தனர்.
30 ஆண் கைதிகள் தங்கும் அளவிற்கு அறைகள் உள்ளன. கிளைச்சிறை இயங்க அனைத்து வசதி களும் உள்ளது.
இந்நிலையில் கடந்த 2.4.2020-ம் ஆண்டு கொரோனா காலக்கட்ட த்தில் குற்றவாளிகளை கைது செய்து, சிறையில் அடைக்காமல் இருந்து வந்த காரணத்தால், கைதிகள் கிளைச்சிறையில் இல்லாத நிலையில், ஊத்தங்கரை ஆண்கள் கிளைச்சிறை தற்காலிகமாக மூடப்பட்டது.
மூடப்பட்ட கிளைச்சிறை தற்போது வரை பயன் பாட்டிற்க்கு கொண்டு வரவில்லை. இதனால் ஊத்தங்கரை உட்கோட்த்தில் உள்ள ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, கல்லாவி, சாமல்பட்டி, மத்தூர் மற்றும் ஊத்தங்கரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் ஊத்தங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களில் கைது செய்யப்படும் கைதிகளை, கிருஷ்ணகிரி கிளைச்சிறை அல்லது ஓசூர் மற்றும் சேலம் மத்திய சிறைக்கு கொண்டு சென்று விட வேண்டிய சூழ்நிலை உள்ளது.
காவல் நிலையங்களில் போதிய போலீசார் இல்லாமல் இருந்து வரும் நிலையில், கைதிகளை நீதிமன்ற காவலுக்கு அழைத்துச் செல்லவும், மீண்டும் கைதிகளை நீதிமன்ற காவல் நீட்டிப்புக்கு கிருஷ்ணகிரி, ஓசூர் மேலும் சேலம் மத்திய சிறையில் இருந்தும், ஊத்தங்கரை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த கொண்டுவர, அவதி பட வேண்டிய நிலை இருந்து வருகிறது.
இதனால் மாற்று பணியில் உள்ள போலீசார், இப்பணிக்காக பயன்படுத்த ப்பட்டு வருவதால், போலீசாரின் பணிச்சுமை அதிகமாக இருந்து வருகிறது. இதனால் போலீசார் மன உளைச்சலில் உள்ளனர்.
சில குற்ற வழக்குளில் குற்றவாளிகளை காவல் நிலையங்களிலேயே பினையில் விடக்கூடிய சூழ்நிலை உள்ளது.
ஊத்தங்கரையில் உள்ள கிளைச்சிறை செயல்படும் பட்சத்தில், போலீசாரின் பணிச்சுமை குறைவதோடு, காலமும் குறையும், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் நிலை உள்ளது.
போலீசாரின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






