என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "51 பேர் மீது வழக்கு"

    • போலீசார் மூதாட்டியின் உடலை மயானத்திற்கு தூக்கி சென்றனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட 51 பேர் மீது சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி கீழ்த்தெருவை சேர்ந்த மூதாட்டி ஒருவர் நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் மூதாட்டியின் உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதனிடையே பாதை வசதி இல்லாததால் பொதுமக்கள் மூதாட்டியின் உடலை ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர்.

    இந்த தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மாயானத்திற்கு பாதை வசதி செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். பின்னர் போலீசார் மூதாட்டியின் உடலை மயானத்திற்கு தூக்கி சென்றனர். அங்கு மூதாட்டியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    இந்தநிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 51 பேர் மீது சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ×