என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திடீர் குழியால் பரபரப்பு"

    • வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
    • குழி எதனால் ஏற்பட்டது பழங்கால கால சுவடா என்பது ஆய்வுக்குப் பின்பு தெரிய வரும் என தொல்லியல் துறை அலுவலர் தெரிவித்தார்.

    ஊத்தங்கரை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி அருகே உள்ள கங்கானூர் பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 59). இவருக்கு சொந்தமான நிலத்தில் ஏர் உழுது கடலை பயிரிட்டுள்ளார்.

    இந்த நிலையில் அவருடைய நிலத்தில் ஒரு அடி அகலத்தில் ஏழடி ஆழத்தில் திடீரென குழி தோன்றியது . இது குறித்து அவர் வருவாய் துறை அதிகாரியிடம் தெரிவித்தார்.

    வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்ட தொல்லியல் துறை அலுவலர் பரந்தாமன் திடீரென ஏற்பட்ட குழியை ஆய்வு செய்தார். வட்டாட்சியர் திருமலை ராஜன் வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார் கிராம நிர்வாக அலுவலர் பிந்து உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    குழி எதனால் ஏற்பட்டது பழங்கால கால சுவடா என்பது ஆய்வுக்குப் பின்பு தெரிய வரும் என தொல்லியல் துறை அலுவலர் தெரிவித்தார். இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×