என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிணற்றில் குளிக்க சென்ற"

    • குருவாடிப்பட்டி புது ஆறு அருகில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.
    • கிணற்றுக்குள் குதித்த அப்துல் ரசாக் நீரில் மூழ்கிய போது மூச்சு திணறி உள்ளார்.

    வல்லம்:

    தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு பாத்திமா நகரை சேர்ந்தவர் சையது முகமது கனி என்பவரின் மகன் அப்துல் ரசாக் (வயது 18). இவர் திருச்சியில் உள்ள ஜமால் முகம்மது கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று அப்துல் ரசாக் அவருடைய 2 நண்பர்களுடன் சேர்ந்து தஞ்சை அருகே உள்ள குருவாடிப்பட்டி புது ஆறு அருகில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.

    இந்நிலையில் நேற்று மாலை அப்துல் ரசாக் மற்றும் அவருடைய நண்பர் ஒருவரும் சேர்ந்து குளிப்பதற்கு கிணற்றின் மேல் இருந்து கிணற்றுக்குள் குதித்து உள்ளனர்.

    அவர்களுடன் வந்த மற்றொரு நண்பர் கிணற்றில் குதிக்காமல் மேலே நின்றுள்ளார். இதனையடுத்து கிணற்றுக்குள் குதித்த அப்துல் ரசாக் நீரில் மூழ்கிய போது மூச்சு திணறி உள்ளார்.

    இதில் அவர் மூச்சு திணறி கிணற்றுக்குள்ளேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

    அவருடைய குளித்த மற்றொரு நண்பர் உயிர் தப்பினார்.

    இது குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் இருந்து கல்லூரி மாணவர் அப்துல் ரசாகின் உடலை மீட்டனர்.

    பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி வல்லம் போலீஸார் ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பலியான அப்துல் ரசாக்கின் தந்தை சையது முகமது கனி (வயது 48) கொடுத்துள்ள புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×