என் மலர்
நீங்கள் தேடியது "திருமுருகன்பூண்டி கோவில்"
- திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடம் ராக்கியாபாளையம் கிராமத்தில் 8 ஏக்கர் உள்ளது.
- கோவில் சொத்தையும் பொதுமக்களை மிரட்டும் நபர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்து ராஜை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடம் ராக்கியாபாளையம் கிராமத்தில் 8 ஏக்கர் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடி ஆகும்.
இந்த இடத்தை வெளியூரை சேர்ந்த சிலர் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தகவல் அறிந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரியிடம் சென்று கேட்டபோது அவர்கள் உரிய பதில் அளிக்காமல் காலம் கடத்தி வருகின்றனர்.
மேலும் இடத்தை அபகரிக்க துடிக்கும் நபர்கள் பக்தர்கள் மற்றும் பொதுமக்களை அதிகாரி முன்னிலையில் மிரட்டி வருகிறார்கள். எனவே கோவில் சொத்தையும் பொதுமக்களை மிரட்டும் நபர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.






