என் மலர்
நீங்கள் தேடியது "ஆபரேட்டர்கள் மனு"
- தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டால் அவர்களுக்கு தொகுப்பூதியம், 2,000 ரூபாய் வழங்க வேண்டும்.
- டேங்க் ஆபரேட்டர்களுக்கு தொகுப்பூதியம் வழங்கி கடந்த, 2017-ம் ஆண்டு உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம், தேன்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆப்பரேட்டர்கள் செல்வராஜ், முருகேசன், சித்தரன் சின்ன கவுண்டர், குமார் உள்ளிட்டோர் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த, 2000-ம் ஆண்டிற்கு பிறகு ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டால் அவர்களுக்கு தொகுப்பூதியம், 2,000 ரூபாய் வழங்கவும் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு பணியில் சேர்க்கவும் அரசு உத்தரவிட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்பகுதியில் உள்ள டேங்க் ஆபரேட்டர்களுக்கு தொகுப்பூதியம் வழங்கி கடந்த, 2017-ம் ஆண்டு உத்தரவிட்டார். ஆனால் கெலமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், அப்பகுதியில் உள்ள தண்ணீர் டேங்க் ஆபரேட்டர்களுக்கு தொகுப்பூதியம் வழங்காமல், மாதம், 250 ரூபாய் மட்டுமே வழங்கி வருகிறார்கள்.
எங்களுக்கு பணி நிரந்தரம், தொகுப்பூதியம் வழங்க கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்படும், அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே பாதிக்கப்பட்ட தண்ணீர் டேங்க் ஆபரேட்டர்கள் வருகிற ஆகஸ்ட் 1-ந் தேதி காலை, 10 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தமிழக முதல்-அமைச்சர் அலுவலகம் கோட்டை வரை கோரிக்கை விளக்க பதாகைகளை ஏந்தி கவன ஈர்ப்பு பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






