என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாதாந்திர ஆய்வுக் கூட்டம்"

    • கலெக்டர் உத்தரவு
    • மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் முன்னிலை வகித்தார். இதில் சப்-கலெக்டர்கள், தாசில்தார்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கலெக்டர் வளர்மதி கூறியதாவது:-

    வாலாஜா, அரக்கோணம், ஆற்காடு ஆகிய பகுதிகளில் மினி ஸ்டேடியம் கட்டுவ தற்கான இடம் தேர்வு செய்யும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். இலங்கை தமிழர் குடியி ருப்புகள் உள்ள வாலாஜா மற்றும் சோளிங்கர் வட்டங்களில் புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கு இடத்தை ஆய்வு செய்து தேர்வு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து தாசில்தார்களும் தங்கள் வட்டங்களில் உள்ள வாக்குச்சா வடிகளை ஆய்வு செய்ய வேண்டும்.

    அடிப்படை வசதிகள் சீரமைப்பது குறித்து அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×