என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருத்திகை நாளில் கிரிவலமும் வெகு விமரிசை"

    • பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்
    • கிரிவல நிகழ்ச்சி நடைபெற்றது

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே உள்ள வேடந்தாங்கல் கிராமத்தில் குன்றின் மீது சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.

    இங்கு மாதம்தோறும் கிருத்திகை நாளில் கிரிவலமும் வெகு விமரிசையாக நடந்து வருகிறது. இந்த கோவிலில், நேற்று கிருத்திகையை யொட்டி முருகப்பெருமானுக்கு மஞ்சள், பால் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பின், வண்ண வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து மாலையில் சுப்பிரமணிய சாமி, வள்ளி, தேவசேனா சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்லக்கில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பின்பு மங்கள வாத்தியங்களுடன் பக்தர்கள் அரோகரா, அரோகரா என்று முழக்கமிட்டவாறு கிரிவல நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாணாவரம், நெமிலி, காவேரிப்பாக்கம், ஒச்சேரி, சோளிங்கர் பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×