என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கே.எஸ்.ரவிகுமார்"

    • தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரும், நடிகருமான கே.எஸ். ரவிக்குமார்,
    • எங்கள் சினிமாவின் நித்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார்,

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரும், நடிகருமான கே.எஸ். ரவிக்குமார்,

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள சிறப்பான தருணத்தை நினைவுகூர்ந்து அவர் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய, முத்து மற்றும் படையப்பா படத்தில் இருந்து சில புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தனது X பக்கத்தில், அவர் "எங்கள் சினிமாவின் நித்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார்,

    திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததற்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். இன்று கூலி திரைப்படம் வெளியாகியுள்ளது, இது வெறும் திரைப்படமல்ல, இது உங்கள் சாம்ராஜ்யத்தின் கொண்டாட்டம்" என்று பதிவிட்டார்.

    அத்துடன், 'படையப்பா' மற்றும் 'முத்து' படங்களில் படப்பிடிப்பு நேரத்தில் எடுக்கப்பட்ட சில அரிய புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

    அவற்றில், ரஜினிகாந்த், கே.எஸ். ரவிக்குமார், மற்றும் புகழ்பெற்ற இயக்குனர் கே. பாலச்சந்தர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

    ரஜினிகாந்த் – கே.எஸ். ரவிக்குமார் கூட்டணி தமிழ் சினிமாவில் அளித்த வெற்றிகள் ரசிகர்களிடையே இன்னமும் மறக்க முடியாதவையாகும்.

    • இயக்குனர் ஆர். விஜயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "அழகிய கண்ணே".
    • இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் திரைப்பிரலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    இயக்குனர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் ஆர்.விஜயகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் "அழகிய கண்ணே". இப்படத்தில் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் பிரபுசாலமன் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். சேவியர் பிரிட்டோ எஸ்தல் எண்டர்டெய்னர் நிறுவனம் தயாரிக்க என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.


    அழகிய கண்ணே டிரைலர் வெளியீட்டு விழா 

    அழகிய கண்ணே டிரைலர் வெளியீட்டு விழா 

    இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் திரைப்பிரலங்கள், படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் பேசியதாவது, பள்ளிக்காலத்திலிருந்தே லியோனி சார் ரசிகன் நான், அவரது மேடைப்பேச்சு எனக்கு ரொம்பப் பிடிக்கும். லியோனி சார் பற்றிப் பேச நிறைய இருக்கிறது. இன்று மேடையில், அவர் மகன் பேசும்போது ஆனந்தத்தோடு அவர் பார்த்துக் கொண்டிருந்ததை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். பெருமையாக இருந்தது. எல்லா தந்தைக்கும் இந்த அன்பு இருக்கும்.


    அழகிய கண்ணே டிரைலர் வெளியீட்டு விழா 

    அழகிய கண்ணே டிரைலர் வெளியீட்டு விழா 

    இயக்குனர் விஜயகுமார் பேச்சிலேயே அவர் சிறந்த படைப்பைத் தந்திருப்பார் என்பது தெரிகிறது. மிகக் கூர்மையாக, நகைச்சுவையுடன் பேசினார் படமும் அப்படி இருக்கும் என நம்புகிறேன். நாயகன் சிவா அவரிடம் பேச்சில் தெரியும் பணிவு, அவரின் பெற்றோரிடமிருந்து வந்திருக்கிறது. நீங்கள் தமிழ் சினிமாவில் பெரிய இடத்தை அடைய வேண்டும். படத்தில் எல்லோரும் கடினமாக உழைத்திருப்பது தெரிகிறது.  லியோனி சார் யார் மனதையும் காயப்படுத்தாதவர். அவர் மனது போலவே படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள். 

    ×