என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூங்கொத்து கொடுத்து வரவேற்பு"

    • இன்று 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது
    • இன்று காலையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் எம்.எல்.ஏ. தலைமையில் நகர் மன்ற தலைவர் பரிதாநவாப் ஆகியோர் மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் இன்று 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது.

    இதையடுத்து கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளை வரவேற்கும் விதமாக இன்று காலையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் எம்.எல்.ஏ. தலைமையில் நகர் மன்ற தலைவர் பரிதாநவாப் மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவாப், நிர்வாகிகள் நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் எஸ்.எம்.சி குழுவினர் கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    ×