என் மலர்
நீங்கள் தேடியது "கடைகள் தீ விபத்து"
- தீ மளமளவென அருகில் 2-வது தளத்தில் இருந்த மற்ற கடைகளுக்கும் பரவி பற்றி எரிந்தது.
- மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
ராயபுரம்:
சவுகார்பேட்டை, மின்ட் தெருவில் 2 மாடி கட்டிடத்தில் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு துணிக்கடை உள்பட மொத்தம் 13 கடைகள் உள்ளன.
இன்று அதிகாலை 3 மணி அளவில் கீழ்தளத்தில் உள்ள துணிக்கடை, வெள்ளி பாத்திரக் கடைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அருகில் 2-வது தளத்தில் இருந்த மற்ற கடைகளுக்கும் பரவி பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் வண்ணாரப்பேட்டை, எஸ்பிளனேடு, ராயபுரம், திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, எழும்பூர், தண்டையார்பேட்டை தீயணைப்பு நிலையங்களில் இருந்து 7 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேல் போராடி கடைகளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். எனினும், துணிக்கடை, வெள்ளி பாத்திரக்கடை உள்பட 5 கடைகள் முற்றிலும் எரிந்து நாசமானது. சேத மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று தெரிகிறது.
மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. அதிகாலையில் கடை மூடப்பட்டு இருந்த நேரத்தில் தீவிபத்து ஏற்பட்டதால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.






