என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாளை பள்ளிகள் திறப்பு"

    • வகுப்பு அறைகள் சுத்தம் செய்யும் பணிகளில் பள்ளி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
    • ஸ்டேஷனரி கடைகளில் மாணவர்களின் பெற்றோர்கள் திரண்டனர்.

    தருமபுரி,

    தமிழகத்தில் கோடைவிடுமுறைக்கு பின்பு 1-ந் தேதி அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்த நிலையில் கடும் வெப்ப தாக்கத்தின் காரணமாக 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் வரை நாளை (12-ந் தேதி) என்றும், 1-ம் முதல் 5-ம் வகுப்புகளுக்கு வருகிற 14-ந் தேதி என்றும், தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவித்தது.

    இதைத்தொடர்ந்து நாளை 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் திறக்கப்படுகின்றன. இதற்கான முன்னேற்பாடு பணிகள் பள்ளிகளில் நடைபெற்று வந்தன. மேலும், வகுப்பு அறைகள் சுத்தம் செய்யும் பணிகளில் பள்ளி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்க செல்லக்கூடிய மாணவர்கள் தங்களுக்கு தேவையான நோட், புத்தகங்கள் வாங்குவதற்கும், மேலும், பேனா, பென்சில், ரப்பர், காலணிகள், ஸ்கூல் பேக், வாட்டார் பாட்டில், டிபன் பாக்ஸ் வாங்குவதற்காக கடைகளில் தங்களது குழந்தைகளை பெற்றோர்கள் அழைத்து வந்தனர். இதனால் தருமபுரி, அரூர், காரிமங்கலம், கடத்தூர் ஆகிய நகர பகுதிகளில் உள்ள ஸ்டேஷனரி கடைகளில் மாணவர்களின் பெற்றோர்கள் திரண்டனர்.

    இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், ஓசூர், கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, பர்கூர் ஆகிய நகர பகுதிகளில் உள்ள ஸ்டேஷனரி கடைகளில் பெற்றோர்கள் திரண்டனர்.

    ×