என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜினாமா செய்ய தயார் ஓசூர் எம்.எல்.ஏ.சவால்"

    • என்மீது உண்மைக்கு புறம்பான செய்தி பரப்பப்படுகிறது.
    • கல்குவாரி இருப்பதாக நிரூபித்தால், எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யத் தயார்.

      ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கனிம வளம் கடத்தப்பட்ட பின்னணியில், ஓசூர் எம்.எல்.ஏ.வும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான ஒய். பிரகாஷ் இருப்பதாக, வாரம் இரு முறை வெளியாகும் ஒரு பத்திரிகையில் செய்திக் கட்டுரை வெளிவந்துள்ளது.

    இது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில், ஓசூரில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில், ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அந்த பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தி கட்டுரைக்கும், எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

    இதுவரை எந்தவித சர்ச்சையோ, ஊழல், புகார் வழக்குகளுக்கு சிக்காத எம்.எல்.ஏ. என்றால், அதில் முதன்மையானவனாக நான் இருப்பேன். நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால், மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ள என்மீது உண்மைக்கு புறம்பான செய்தி பரப்பப்படுகிறது.

    செய்தி வெளியிட்ட வர்கள் மீதும், அதனை வெளியிட காரண மானவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனக்கு எந்த கிரானைட் தொழிற் சாலையோ,கல்குவாரியோ இல்லை. அப்படி இருப்பதாக நிரூபித்தால், எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யத் தயார்.இந்த செய்தியை பரப்பிய சம்பந்தப்பட்ட பத்திரிகை நிறுவனத்தின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொண்டு அவதூறு வழக்குத்தொடரப்படும். என் சார்பில் வழக்கு தொடர்வதா, அல்லது கட்சி சார்பிலா? என்பதை தலைமையுடன் பேசி முடிவெடுக்கப்படும்", இவ்வாறு அவர் கூறினார்.

    ×