என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிணற்றில் தவறி விழுந்து சாவு"

    • திருமணம் நடந்து 6 ஆண்டுகள் ஆகிறது.
    • கிணற்றை எட்டி பார்க்கும்போது தவறி கீழே விழுந்தார்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே எஸ்.தட்டனபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாஸ். இவரது மனைவி யசோதா (வயது24). கூலித்தொழிலாளியான இவருக்கும் திருமணம் நடந்து 6 ஆண்டுகள் ஆகிறது.

    இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் கை கழுவுதற்காக சென்றார். அப்போது அவர் கிணற்றை எட்டி பார்க்கும்போது தவறி அதில் விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து உறவினர் வெங்கடேஷ் பேரிகை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணமாகி 6 வருடங்கள் ஆனநிலையில் யசோதா இறந்த சம்பவம் குறித்து ஓசூர் டி.எஸ்.பி. பாபுபிரகாஷ் பெண்ணின் கணவர் சீனிவாஸ் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றார்.

    ×