என் மலர்
நீங்கள் தேடியது "மின்கல வாகனங்கள்"
- 18 மூன்று சக்கர மின்கல வாகனங்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டது.
- உஷாராணிகுமரேசன் , 18 ஊராட்சி மன்ற தலைவர்களிடம் சாவிகளை வழங்கினார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, சிங்காரப்பேட்டை, மிட்டப்பள்ளி, அத்திப்பாடி, கொண்டம்பட்டி, வெள்ளக்குட்டை, புதூர்புங்கனை உள்ளிட்ட 18 ஊராட்சிகளில் குப்பைகளை கொண்டு செல்வதற்காக, தலா ரூ.2.50 லட்சம் மதிப்பில், 45 லட்சம் மதிப்பிலான 18 மூன்று சக்கர மின்கல வாகனங்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் உஷாராணிகுமரேசன் தலைமை வகித்து, 18 ஊராட்சி மன்ற தலைவர்களிடம் சாவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் வேடியப்பன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மிட்டப்பள்ளி சின்னத்தாய், கீழ் மத்தூர் மணிகண்டன், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள்,தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






