என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூழ் ஊற்றும் விழா"

    • ஏராளமான பக்தர்கள் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.
    • திருவிழா குழுவினர், மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே உள்ள வீரகவுண்டனூர் கிராமத்தில் சக்தி மாரியம்மன் காளியம்மன்கோவில் திருவிழாவை முன்னிட்டு முனியப்ப சாமிக்கு மூப்பூஜை செய்யப்பட்டது. திங்கட்கிழமை கொடியேற்றி கங்கணம் கட்டி, செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு சக்தி மாரியம்மனுக்கு மேளதாள வான வேடிக்கை முழங்க முக்கிய வீதிகளின் வழியாக கூழ் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

    இதனையடுத்து கோவிலை அடைந்த பின்னர், அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, பக்தர்கள் கூழ் ஊற்றி வேண்டுதலை நிறைவேற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை திருவிழா குழுவினர், மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×