என் மலர்
நீங்கள் தேடியது "மறுவாழ்வுக்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்"
- ஆய்வு கூட்டத்தில் ஆலோசனை
- கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை சார்பில் கள்ளச்சாராயம், போலி மது விற்பனை தடை செய்வது தொடர்பாக ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.
கலெக்டர் பா. முருகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவண்ணாமலை சப்-கலெக்டர் மந்தாகினி வரவேற்றார்.
இந்த கூட்டத்தில,' கிராமம் வாரியாக கள்ளச்சாராயம், காய்ச்சும் நபர்களுக்கு தேவையான பொருட்களை தந்து உதவும் நபர்களை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப வேண்டும். காவல் துறை சார்பில் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் கள்ளச்சாரய தேடுதல் வேட்டை நடத்த வேண்டும்.
கள்ளச்சாராயம் காய்ச்சும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு மறுவாழ்வுக்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தொழிலில் ஈடுபடும் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவதுறை சார்பில் மறுவாழ்வு மையம் ஏற்படுத்தப்பட உள்ளது.
கள்ளத்தனமாக சாராயம் விற்பது மற்றும் காய்ச்சுவது, போதைப் பொருட்கள் பதுக்குவதை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலியான மதுபா னங்கள் விற்பனை மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் கீழ் உரிமம் வழங்கப்பட்ட பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களை ஆய்வு செய்ய வேண்டும்.
இதில் சமூக விரோத செயலில் ஈடுபட்டு, திருந்தி வாழும் நபர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் வழிவகை செய்ய வேண்டும்.
மேலும் அவர்களுக்கு சுய தொழில் தொடங்க நிதி உதவி, இலவசமாக ஆடு,மாடு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்க ஆங்காங்கே சிறப்பு முகாம்கள் நடத்தி மக்களிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்துவது தொ டர்பாக கலந்தாலோசனை செய்யப்பட்டது.
இதில், செய்யாறு சப்- கலெக்டர் அனாமிகா, உதவி கலெக்டர் ரஷ்மி ராணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெற்றிவேல், சுகா தாரத்துறை துணை இயக்குனர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






