என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்.டி.ஓ. விசாரணைக்"

    • மருந்து கடையில் சூப்பர்வைசராக பணி புரிந்து வருகிறார்.
    • முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த நடு குப்பத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் பண்ருட்டியில் உள்ள அப்பல்லோ மருந்து கடை யில் சூப்பர்வைசராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி அனு பிரியா (வயது 28) இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகன்ஒரு மகள் உள்ளனர்.

    அனுபிரியா நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது அவரது அறையில் நைலான் புடவையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித் தகவல் அறிந்து அங்கு வந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன், முத்தாண்டிக்குப்பம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் அனுபிரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம் பாக்கம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து அனு பிரியாவின் தாயார் சொரத் தூரை சேர்ந்த சூரியகலா முத்தாண்டிக்குப்பம் போலீ சில் புகார் கொடுத்தார். புகாரில் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி யுள்ளார். இதனையடுத்து அனுப்பிரியா இறந்தது குறித்து அவரது கணவன் மணிகண்டனிடம் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 6 ஆண்டுகளே ஆகி யுள்ள நிலையில் அனுபிரியா மரணத்தில் ஆர்.டி.ஓ விசா ரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

    ×