என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீயால் எரிந்த புளிய மரம்"

    • ஏரி பகுதியில் இருந்த புளியமரம் தீ பிடித்து ஏரிய தொடங்கியது.
    • தீயணைப்பு துறையினர் வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் சாமிசெட்டிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஏரி பகுதியில் மர்ம நபர்கள் அங்குள்ள குப்பைக்கு தீ வைத்துள்ளனர்.

    அப்பொழுது ஏரி பகுதியில் இருந்த புளியமரம் தீ பிடித்து ஏரிய தொடங்கியது. முதலில் பிடித்த தீயானது புளிய மரத்தின் உட்பகுதியில் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

    அதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். அதற்குள் மரத்தின் உட்பகுதி முழுவதும் எரிந்துவிட்டது. பல ஆண்டுகளாக ஏரி பகுதியில் இருந்து பலன் தரக்கூடிய புளியமரம் குப்பைக்கு வைத்த தீயால் எரிந்து நாசம் ஆகியுள்ளது.

    ×