என் மலர்
நீங்கள் தேடியது "பாவை விளக்கு"
மார்கழி மாதம் என்பது தேவர்களின் அதிகாலை நேரமாகக் கருதப்படுகிறது. "மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்" என்று பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மாவே இதன் சிறப்பைக் கூறியுள்ளார். இந்த மாதத்தில் வழிபாடுகள் செய்வதால் கிடைக்கும் ஆன்மீகப் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
மார்கழி மாத அதிகாலை நேரத்தில் ஓசோன் வாயு பூமியில் அதிக அளவில் இருக்கும். அந்த நேரத்தில் எழுந்து நீராடி, கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவது உடல் ஆரோக்கியத்தைத் தருவதோடு, மனதை ஒருநிலைப்படுத்தி தன்னம்பிக்கையையும், ஒழுக்கத்தையும் வளர்க்கிறது.
இங்கு, மார்கழி மாதத்தின் சிறப்பான பாவை நோன்பின பலன்கள் குறித்து பார்க்கலாம்.
கன்னிப் பெண்கள் மார்கழி மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை பாடி நோன்பு நோற்பதால், நற்குணங்கள் கொண்ட கணவன் அமைவார் என்பதும், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும் என்பதும் நம்பிக்கை. ஆண்டாள் நாச்சியார் காட்டிய வழியில் இறைவனைத் துதிப்பது ஆத்ம பலத்தைத் தரும்.
இதேபோல், மார்கழி மாதத்தின் மிக முக்கியமான நிகழ்வு வைகுண்ட ஏகாதசி. அன்று விரதமிருந்து பெருமாளை தரிசனம் செய்து, சொர்க்கவாசல் வழியாகச் செல்வது இப்பிறவியில் செய்த பாவங்களை நீக்கி, பிறவா நிலை எனப்படும் முக்தியைத் தரும் என்று புராணங்கள் கூறுகின்றன.
- நிறைநாழி எனப்படும் படியில் நெல் வைத்து அதன் மீது காமாட்சி அம்மன் விளக்கின் மீது தீபம் ஏற்றப்படும்.
- ஐந்துமுகக் குத்துவிளக்குகள் இரண்டு பூஜை அறையில் சுடர் விட்டு பிரகாசிக்குமானால் அங்கே மங்கலம் பொங்கும் என்பது ஐதீகம்.
காமாட்சி விளக்கு
விளக்குகளில் இது புனிதமானது. எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய விளக்கு. பூஜைக்கு முன் பூவும், பொட்டும் வைத்து மங்கலத்துடன் தீபம் ஏற்றி, தினமும் வழிபடத்தக்கது.
பல குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக காமாட்சியம்மன் விளக்குகளை பொன் போலப் போற்றிப் பாதுகாப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். சிலர் தம் முன்னோர்கள் ஏற்றிய காமாட்சியம்மன் விளக்குச் சுடர் தொடர்ந்து, நிலைத்து, எரியும்படி கவனித்துக் கொள்கின்றனர்.
புதுமனை புகும்போதும், மணமக்கள் மணப்பந்தலை வலம் வரும்போதும், எல்லா இருள்களையும் நீக்கியபடி, அருள் ஒளியை அனைவருக்கும் அருளியபடி முன்னால், பக்தியுடன் ஏந்திச் செல்லப்படும் விளக்கும் காமாட்சியம்மன் திருவிளக்கே. புதுப்பெண் புகுந்த வீட்டுக்கு வரும்போது, நிறைநாழி எனப்படும் படியில் நெல் வைத்து அதன் மீது காமாட்சி அம்மன் விளக்கின் மீது தீபம் ஏற்றப்படும்.
பெண்ணுக்கு சீர்வரிசைகளை தரும்போது காமாட்சியம்மன் விளக்கும், இரண்டு குத்து விளக்குகளும் அவசியம் வழங்கப்பட வேண்டும். விளக்குகள் தமிழர் வாழ்வில் ஓர் அங்கம். மங்கலப் பொருட்களில் இந்த காமாட்சி விளக்கும் ஒன்று.
குத்து விளக்கு
குத்துவிளக்கும், காமாட்சியம்மன் விளக்கை போலப் புனிதமானது. செங்குத்தாக நிமிர்ந்து நேராக நிற்கும் விளக்கு (குத்து&நேர்) என்பதால் குத்துவிளக்கு என்ற பெயர் ஏற்பட்டது. இந்த விளக்கு பூஜையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஐந்துமுகக் குத்துவிளக்குகள் இரண்டு பூஜை அறையில் சுடர் விட்டு பிரகாசிக்குமானால் அங்கே மங்கலம் பொங்கும் என்பது ஐதீகம்.
ஓர் அங்குலம் முதல், பல அடிகள் உயரமுள்ள குத்து விளக்குகள், மிக அழகிய கலை நுட்பங்களுடன் கிடைக்கின்றன. உச்சியில் அன்னம் வீற்றிருக்கும் குத்துவிளக்குகளில் சில வழிபாட்டுக்குரியவையாகவும், சில அலங்காரத்திற்கு உரியவையாகவும் விளங்குகின்றன.
பாவை விளக்கு
ஒரு பெண் அகல் விளக்கை ஏந்திக்கொண்ருப்பதுபோல் இருப்பது பாவை விளக்கு எனப்படுகிறது. இந்த வகை விளக்குகளை கடவுளின் முன் ஒளிதரும் விளக்காக பயன்படுத்தலாம்.
தீபங்கள் பதினாறு
தூபம், தீபம் புஷ்பதீபம் (பூ விளக்கு), நாத தீபம், புருஷா மிருகதீபம், கஜதீபம், ருயாஜத (குதிரை) தீபம், வியாக்ர (புலி) தீபம், ஹம்ஸ் (அன்னம்) தீபம், கும்ப (குடம்) தீபம், குக்குட (கோழி) தீபம், விருக்ஷ தீபம், கூர்மா (ஆமை) தீபம், நட்சத்திர தீபம், மேருதீபம், கற்பூர தீபம் என தீபங்கள் 16 வகைப்படும்.
தூக்கு விளக்குகள் ஒன்பது
1. வாடா விளக்கு
2. ஓதிமத்தூக்கு விளக்கு
3. தூண்டாமணி விளக்கு
4. ஓதிம நந்தா விளக்கு
5. கூண்டு விளக்கு
6. புறா விளக்கு
7. நந்தா விளக்கு
8. சங்கிலித் தூக்கு விளக்கு
9. கிளித்தூக்கு விளக்கு.
பூஜை விளக்குகள் ஒன்பது
சர்வராட்சததீபம், சபூத தீபம், பிசாஜ தீபம், கின்னர தீபம், கிம்புரு தீபம், கணநாயக தீபம், வித்யாகர தீபம், கந்தர்வ தீபம், பிராஹதீபம் ஆகியவை 9 வகை பூஜை விளக்குகளாக வழக்கத்தில் உள்ளன.
சரவிளக்கு, நிலை விளக்கு, கிளித்தட்டு விளக்கு ஆகியன கோவில் விளக்குகளின் மூன்று வகைகளாகும்.
கைவிளக்குகள் ஏழு
கஜலட்சுமி விளக்கு, திருமால் விளக்கு, தாமரை விளக்கு, சிலுவை விளக்கு, சம்மனசு விளக்கு, கணபதி விளக்கு, கைவக் விளக்கு ஆகியவை கை விளக்குகளாகும்.
நால்வகை திக்பாலர் தீபங்கள்
ஈசான தீபம், இந்திர தீபம், வருண தீபம், யம தீபம்.
அஷ்டகஜ தீபங்கள் எட்டு
ஐராவத தீபம், புண்டரீக தீபம், குமுத தீபம், ஜனதீபம், புஷ்பகந்த தீபம், சர்வ பெளம தீபம், சுப்ரதீபம், பித்ர தீபம்.






