என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்க மாநில பொதுக்குழு கூட்டம்"

    • வேளாண்மை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
    • பல்வேறு துறைகளை ஒப்பீடு செய்து வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    ஓசூர், 

    ஓசூரில் தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

    இதில் மாநில தலைவர் அருள், மாநில செய்தி மற்றும் ஊடகப்பிரிவு ரவிச்சந்திரன் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்த பொதுக்குழு கூட்டத்தில், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 16- வது அறிவிப்பாக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 2.0 என்ற அறிவிப்பு மூலம் 3 அல்லது 4 கிராமங்களுக்கு ஒரு வேளாண்மை விரிவாக்க அலுவலர் நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்புக்கு தமிழக முதலமைச்சருக்கும், வேளாண்மை துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    மேலும், தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் படிப்புக்கு கல்வி தகுதியாக பிளஸ்-2 உடன் 2 வருட டிப்ளமோ படிப்பு தோட்டக்கலைத்துறை ஆகியவையுடன் 4428 பணியிடங்களுக்கு தமிழ்நாடு தேர்வு ஆணையம் மூலம் தேர்வு நடத்தப்பட வேண்டும்.

    துணை வேளாண்மை அலுவலர், துணை தோட்டக்கலை அலுவலர் என்ற பதவிகளை வேளாண்மை அலுவலர் நிலை 2, தரம் 2 என மாற்றி கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு வேளாண்மை உதவி இயக்குனர், தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆகிய பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும் அதனை அரசு விதிகளின்படி பல்வேறு துறைகளை ஒப்பீடு செய்து வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    அதேபோல், தமிழகத்தில் பல அரசு துறைகளில் 5 அடுக்கு பதவி உயர்வு உள்ளது. தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு குறைநதபட்சமாக 3 அடுக்கு பதவி உயர்வாகு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவே–ற்றப்பட்டது. இதில்,தமிழகம் முழுவதிலிருந்தும் ஏராளமான தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×