என் மலர்
நீங்கள் தேடியது "நாயன்மார்"
- வருடம் தோறும் வைகாசி பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
- விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூன் 2-ந்தேதி நடக்கிறது.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் வைகாசி பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வைகாசி பெருவிழா வருகிற 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூன் 2-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி பாடலீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி நடைபெற்றது. இதில் 63 நாயன்மார் அமைப்பு சார்பில் ராமலிங்கம் தலைமையில் உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் கோவில் கொடிமரம், கோவிலின் சுற்றுச்சுவர், சாமி வீதி உலா செல்லக்கூடிய வாகனம் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. இதில் கோவில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.






