என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுத் தேர்வு முடிவு"

    • 457 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்
    • பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து

    குடியாத்தம்:

    நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.

    இதில் குடியாத்தம் பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

    குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 143 மாணவிகள் தேர்வு எழுதினர். 123 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி 86 சதவீதமாகும்.

    இப்பள்ளி மாணவி ஏ.சாராபாத்திமா 457 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், டி.ஆர்.சுமேராதாஜ் 445 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 2-ம் இடமும், வி.தனா 431 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 3-ம் இடம் பெற்றனர்.

    தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமைஆசிரியர் ஜெயசீலிகிறிஸ்டி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.எஸ்.அமர்நாத், துணைத்தலைவர் நவீன்சங்கர், உறுப்பினர் உறுப்பினர் எம்.என்.ஜோதிகுமார், நகர்மன்ற உறுப்பினர் ஜாவித்அகமது உள்ளிட்டோர் பாராட்டினர்.

    நெல்லூர்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 66 மாணவிகள் தேர்வு எழுதினர்.

    இதில் 62 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி 94 சதவீதமாகும் இப்பள்ளிமாணவி வி.கோபிகா 437 மதிப்பெண் பெற்று முதலிடமும், ஒய்.ஸ்ரீமதி 414 மதிப்பெண் பெற்று 2-ம் இடமும், ஆர். தானுஸ்ரீ 408 மதிப்பெண்கள் பெற்று 3-ம் பெற்றனர்.

    தேர்ச்சி பெற்ற மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டி.கோபி, துணைத்தலைவர் ஜவஹர்பார்த்திபன் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.

    அரசினர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 36 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 33 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 92 சதவீதம் தேர்ச்சி ஆகும்.

    இப்பள்ளி மாணவி ஆர்.ரித்திகா 444 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடமும், எஸ்.பி.லாசிகா 399 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 2-ம் இடமும் கே.சுஜிதா 391 மதிப்பெண் பெற்று பள்ளியில் 3-ம் இடமும் பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் எம்.கீதா, உதவி தலைமைஆசிரியர் என்.எஸ்.பாலசுப்ரமணியம், பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் ம.மனோஜ் உள்ளிட்டோர் பாராட்டினர்.

    நெல்லூர்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 85 மாணவர்கள் தேர்வு எழுதினர்.49 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் 58 சதவீதம் தேர்ச்சியாகும்.

    இப்பள்ளி மாணவன் கே. சந்தோஷ் 399 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடமும், எம்.லட்சுமி பிரியன் 384 மதிப்பெண் பெற்று 2-ம் இடமும், எம்.மனோபாலா 372 மதிப்பெண் பெற்று 3-ம் இடமும் பெற்றனர்.

    தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.டி.திருநாவுக்கரசு, உதவிதலைமை ஆசிரியர் எம்.அருள்பிரகாசம், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜி.எஸ்.அரசு உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    ×