என் மலர்
நீங்கள் தேடியது "அன்னதானம் வழங்கப்பட்டது"
- 2 ஆயிரம் ஆண்டு பழமையானது
- 11 வகையான திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே உள்ள பாக்கம் கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டு பழமையான உமாமகேஸ்வரி உடனுறையான கைலாயநாதர் கோவில் உள்ளது.
இங்கு அனைத்து வகையான பிரதோஷங்கள், அமவாசை, பவுர்ணமி, போன்ற தினங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் நடைப்பெறுவது வழக்கம்.
இதனை தொடர்ந்து இந்த மாதத்தில் நேற்று பிரதோஷம் என்பதால் கைலாயநாதருக்கு பால், தேன், மஞ்சள், குங்குமம், உள்ளிட்ட 11 வகையான திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதனையடுத்து கைலாயநாதருக்கும் உமா மகேஷ்வரிக்கும் சிறப்பு ஆதியோகி அலங்காரம் செய்யப்பட்டது.
இதனை பாக்கம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா முடிவில் அணைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.






