என் மலர்
நீங்கள் தேடியது "பெண்ணிடம் நகை பறித்த மர்மநபர்"
- கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு தேனி பைபாஸ் செல்லும் சாலையில் பெண் உள்பட அவரது கணவரும் பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
- பின்னால் வந்த மற்றொரு பைக்கில் வந்த மர்மநபர்கள் பெண்ணின் தாலிச்செயினை பறித்துச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி:
ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி சுமதி(33). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 4 பேரும் மோட்டார் சைக்கிளில் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர்.
அங்கு சாமி தரிசனம் செய்தபின்னர் பொழுதுபோக்கு அம்ச ங்களை பார்வையிட்டனர். பின்னர் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். குமுளி பைபாசில் இருந்து தேனி பைபாஸ் செல்லும் சாலையில் சென்றபோது பின்னால் மற்றொரு வாகனத்தில் வந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க மர்மநபர் திடீரென சுமதியின் கழுத்தில் இருந்த 9 பவுன் தங்க தாலிக்கொடியை திருட முயன்றார்.
ஆனால் அவர் நகையை இறுக்க பிடித்துக்கொ ண்டதால் பாதியளவை மட்டும் பறித்துக்கொண்டு கண்இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து வீரபாண்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து நகை பறித்துச்சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.






