என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்போடெக் தீ விபத்து"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 15 வண்டிகளில் வந்து தீயை அணைக்கும் பணி நடந்தது. அதன்பின்பு தீ கட்டுக்குள் வந்தது.
    • தீ விபத்து பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சி, காக்கநாடு பகுதியில் தனியார் தொழில்நுட்ப நிறுவனமான ஜியோ இன்போடெக் கட்டிடம் உள்ளது.

    இங்கு ஏராளமான தகவல் தொழில்நுட்ப அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். நேற்று மாலை இக்கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் அந்த பகுதி தீப்பிடித்து எரிந்தது.

    அப்போது காற்று பலமாக வீசியதால் தீ 2-வது மாடிக்கும் பரவியது.

    இதனை கண்ட ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 15 வண்டிகளில் வந்து தீயை அணைக்கும் பணி நடந்தது. அதன்பின்பு தீ கட்டுக்குள் வந்தது.

    தீ விபத்து நடந்த போது கட்டிடத்தில் இருந்த ஊழியர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். என்றாலும் 7 ஊழியர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டனர்.

    தீ விபத்து பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததாக தெரிய வந்துள்ளது. கட்டிடத்தின் கழிவறையில் இருந்துதான் முதலில் தீ வந்ததாக விபத்தை பார்த்தவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×