என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம்"

    • கதவணையில் பராமரிப்பு பணி காரணமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், சேலம் ஈரோடு மாவட்டம் இடையே விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
    • நீரின் விசையைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    எடப்பாடி:

    பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை கதவணையில் பராமரிப்பு பணி காரணமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், சேலம் ஈரோடு மாவட்டம் இடையே விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்குகதவணையில் பராமரிப்பு பணி காரணமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், சேலம் ஈரோடு மாவட்டம் இடையே விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.ம், குடிநீருக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. அப்போது நீரின் விசையைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இதற்காக, சேலம் மாவட்டம், பூலாம்பட்டி, ஈரோடு, மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டையை இணைக்கும் வகையில் கதவணை கட்டப்பட் டுள்ளது. தற்போது, கதவ ணையில் பராமரிப்பு பணி கள் தொடங்கியுள்ளதால், அணையில் இருந்த நீர் வெளியேற்றப்பட்டு, தண்ணீரின்றி குட்டையாக அணை காட்சியளிக்கிறது.

    இதனால், பூலாம்பட்டிக்கும், நெரிஞ்சிப்பேட்டைக்கும் இடையேயோன விசைப்படகு போக்குவரத்து வரும் 20-ந் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது. பூலாம்பட்டியில் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், எடப்பாடி நகராட்சிக்கு காவிரி ஆற்றின் ஆழமான பகுதியில் இருந்து 5 மோட்டார்கள் மூலமாக தண்ணீர் எடுக்க நடவ டிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

    குடிநீர் பராமரிப்பு பணி கள் இன்று மாலைக்குள் முடித்து தண்ணீர் தேக்கி வைக்கப்படும் பின்னர், நாளை வழக்கம் போல் எடப்பாடி நகராட்சி பகுதி யில் குடிநீர் விநியோகம் செய்யப்படும், குடிநீர் விநியோகம் சீராகும் வரை தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×