என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரப்பர் சீட்டு"

    • சுமார் 40 மெட்ரிக் டன் ரப்பர் சீட்டுகள் எரிந்து சேதமடைந்தன
    • காலம் தாழ்த்தாமல் இழப்பீடு தொகையினை விரைவாக வழங்கிட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில் :

    வேளாண் விற்பனை மற்றும் வணிக துறையின் மூலம் கன்னியாகுமரி ரப்பர் உற்பத்தியாளர் நிறுவனம் குலசேகரம் ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்தில் ரப்பர் உற்பத்தியாளர் நிறுவ னம் செயல்பட்டு வருகிறது.

    இந்நிறுவனத்தில் அமைந்துள்ள ரப்பர் கிட்டங்கியில் தீ விபத்து ஏற்பட்டு அங்கு இருந்த சுமார் 40 மெட்ரிக் டன் ரப்பர் சீட்டுகள் எரிந்து சேதமடைந்தன. இதனை அறிந்த முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்த ரம் நேரில் சென்று பார்வை யிட்டார்.

    இங்கு ஏற்பட்டுள்ள சேத விபரங்களை, குமரி மாவட்ட ரப்பர் உற்பத்தியாளர் நிறுவ னத்தின் தலைவர் மனோகரன், செயலாளர் பி.எஸ்.பிரதிப்குமார், பொருளாளர் மோகனகுமார் ஆகியோர் எடுத்து கூறினார்கள். பின்னர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத் தில் 25 ஆயிரம் ஹெக்டரில் ரப்பர் உற்பத்தி செய்யப்படு கிறது. குமரி மாவட்டம் குலசேகரத்தில் உற்பத்தி செய்யப்படும் ரப்பர் உலக தரம் வாய்ந்த சிறப்புக்குரிய தாகும். இந்நிலையில் குலசேகரம் ரப்பர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் கிட்டங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் விவசாயிகள் மற்றும் ரப்பர் வியாபாரிகளின் ரப்பர் சீட்டுகள் சேதமடைந்துள்ளன.

    விவசாயிகளின் மொத்த ரப்பர் ஷீட்டுகள் 26,466 எண்ணமும், இதன் தோராய மான எடை 18,526.200 கிலோ கிராம் ஆகும். இதன் மதிப்பு ரூ.27,41,877 ஆகும். வியாபாரிகளின் ரப்பர் ஷீட்டுகள் 29,307 கிலோ கிராம், இதன் மதிப்பு ரூ.42,49,515 ஆகும். மொத்தம் சேதமடைந்த ரப்பர் ஷீட்டுகளின் மதிப்பு ரூ. 69 லட்சத்து 91 ஆயிரத்து 392 ஆகும். மேலும் ரப்பர் ஷீட்டு அடிக்கும் எந்திரங்கள் தீயினால் சேதமடைந்துள்ளன. இதன் வாயிலாக ஆக மொத்தம் சுமார் ரூ.1.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் ரப்பர் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

    மேலும் இந்த தீ விபத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் ரப்பர் வியாபாரிகளுக்கு காலம் தாழ்த்தாமல் இழப்பீடு தொகையினை விரைவாக வழங்கிட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜாண்தங்கம், ஒன்றிய செயலாளர்கள் சுதர்சன், நிமால், ஜீன்ஸ், கடையால் மணி, ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் உட்பட பலர் உடன் சென்றனர்.

    ×