என் மலர்
நீங்கள் தேடியது "மதியம் வெயில்"
- அதிகாலை நேரங்களில் சில நாட்களில் கடும் பனிமூட்டமும் இருந்து வந்தது.
- மே 4 -ந் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் மாதம் முதல் பனி காலம் முடிந்து சுட்டெரிக்கும் வெயில் அடிக்க தொடங்கியது. தொடர்ந்து ஏப்ரல் மாதம் முழுவதும் கடும் வெயில் அடித்து வந்தது.101 டிகிரி வெயிலின் அளவு பதிவானது குறிப்பிடத் தக்கதாகும். அதிகாலை நேரங்களில் சில நாட்களில் கடும் பனிமூட்டமும் இருந்து வந்தது. கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழையும் பெய்து வருகிறது.
இந்த நிலையில் கடலூர், நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதி யில் நேற்று காலை லேசான சாரல் மழை பெய்தது. பின்னர் வழக்கம் போல் சுட்டெரிக்கும் வெயில் அடித்துவந்தது. நெல்லிக் குப்பம், காராமணிக் குப்பம், வரக்கால்பட்டு, குமராபுரம், கோண்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இனறு காலை முதல் கருமேகம் சூழ்ந்தது. பின்னர் குளிர்ந்த காற்று வீசி வந்த நிலையில் திடீ ரென்று மழை பெய்ய தொடங்கியது. இதன் காரண மாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிறிது நேரம் பெய்த மழை காரண மாக ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர்.
ஒரு சிலர் குடை பிடித்த படி சென்றனர். மழை நின்ற வுடன் மீண்டும் வெயில் அடிக்க தொடங்கியது. வருகிற மே 4 -ந் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. தற்போது கடலூர் மாவட்டத்தில் காலை நேரங்களில் மழை, மதியம் கடும் சுட்டெரிக்கும் வெயில், இரவு நேரங்களில் புழுக்கம் ஏற்படுகிறது.சீதோஷ்ணம் மாற்றம் காரணமாக பொதுமக்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடும் பாதிப்படைந்து வரு கின்றனர். சீதோஷ்ணம் மாற்றம் ஏற்படுவதால் அதற்கு ஏற்றாற்போல் உணவு முறைகளை சரியான முறையில் எடுத்து கொள்ள வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.






