என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாசிச சக்தி"

    • பாசிச சக்திகளை வீழ்த்திட பாட்டாளி வர்க்கம் ஒன்றுபடுவோம் என்று பசும்பொன் பாண்டியன் தெரிவித்தார்.
    • பாட்டாளி வர்க்கத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உழைக்கும் வர்க்கம் மே தினத்தை சீரும் சிறப்புமாக கொண்டாடி மகிழ்ந்து வருகிறோம், பாட்டாளி வர்க்கத்தை கொத்தடிமை களாக பாவித்து உழைப்பைச் சுரண்டிய முதலாளி வர்க்கத்திற்கு எதிராக சிகாகோ நகரின் ரத்தப் புரட்சியால் விளைந்த பயனே உலகம் முழுவதும் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை என்பது.

    இது உழைக்கும் வர்க்கத்திற்கு கிடைத்த புரட்சியின் பயனாகும், இந்தியாவில் திராவிட பூமியான தமிழ் மண்ணில் தான் மே தினம் முதன் முதலாக கொண்டாடிய வரலாற்று பெருமை சிங்காரவேலருக்கும், சக்கரைச் செட்டியாருக்கும் கிடைத்த வரலாற்று பெருமையாகும்,

    தொழிலாளர் விடு தலைக்காக போராடிய தமிழ்த்தென்றல் திரு.வி.க. வை நாடு கடத்த வேண்டும் என்று அன்றைய ஆங்கில ஏகாதிபத்திய அரசு முடிவு செய்தது. தந்தை பெரியாரின் கிளர்ச்சியால் நீதி கட்சி அரசால் அந்த உத்தரவு திரும்பபெறப்பட்டது,

    மே தினத்தன்று இந்தியா விலேயே தமிழகத்தில் தான் சம்பளத்துடன் கூடிய விடுமுறை என அறிவித்தது அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி. அதைப்போல 1990-ல் பிரதமராக இருந்த வி.பி.சிங், கருணாநிதியின் பரிந்துரையால் நாடு முழு வதும் சம்பளத்துடன் கூடிய மே தின விடுமுறையை அறிவித்தார். கருணாநிதி மே தின முழக்கமாக 8 மணி நேரம் வேலை என்பதை 6 மணி நேரமாக குறைத்திட வேண்டும் என்று முழங்கி னார். அதன் அடிப்படையில் தான் திராவிட மாடல் அரசின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் 12 மணி வேலை என்கின்ற சட்டத்தை அனைத்து தொழிற்சங்களி னுடைய வேண்டுகோளை ஏற்று நிறுத்தி வைத்தி ருக்கிறார்.

    பா.ஜனதா அரசு தொடர்ந்து தொழிலாளர்க ளுக்கு எதிராக தொழிலாளர் விரோதச் சட்டங்களை பாராளுமன்ற விவாதங்கள் இல்லாமலே சர்வாதிகார மாக நிறைவேற்றி வருகிறது, பாட்டாளி வர்க்கத்தின் நில உரிமைகளை பாதுகாத்திட உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை வென்றெடுக்க பாசிச சக்திகளை வீழ்த்திட பாட்டாளி வர்க்கமே ஒன்றுபடுவோம். உலகம் முழுவதும் உள்ள பாட்டாளி வர்க்கத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    ×