என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளிர்சாதன பஸ்"

    • அடுத்தகட்டமாக பெரும்பாக்கம் பணிமனையில் மின்சார பஸ்களின் சேவை தொடங்கப்பட உள்ளது.
    • தொடா்ந்து பிற பணிமனைகளில் இருந்தும் மின்சார பஸ்களை இயக்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.

    சென்னை:

    சென்னையில் முதல் முறையாக குளிா்சாதன வசதி கொண்ட மின்சார பஸ் சேவை வருகிற 11-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளதாக மாநகரப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநா் பிரபு சங்கா் தெரிவித்து உள்ளாா்.

    டீசலில் இயங்கும் பஸ்களுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத இயற்கை எரிவாயு மற்றும் மின்சார பஸ்களை இயக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

    அதன்படி, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 625 மின்சார பஸ்கள் 5 பணிமனைகளின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் இயக்க முடிவு செய்யப்பட்டது.

    முதல்கட்டமாக, சென்னை வியாசா்பாடி பணிமனையில் இருந்து 120 மின்சார பஸ்களை கடந்த ஜூன் 30-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். அடுத்தகட்டமாக பெரும்பாக்கம் பணிமனையில் மின்சார பஸ்களின் சேவை தொடங்கப்பட உள்ளது.

    இதுகுறித்து மாநகரப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநா் பிரபு சங்கா் கூறியதாவது:-

    வியாசா்பாடி பணிமனையில் இருந்து மின்சார பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்ததாக, பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து 55 குளிா்சாதன வசதி கொண்ட மின்சார பஸ்களையும், 80 சாதாரண மின்சார பஸ்களையும் இயக்க முடிவு செய்துள்ளோம். வருகிற 11-ந்தேதி முதல் இந்த பஸ்களின் சேவை தொடங்கப்படும். தொடா்ந்து பிற பணிமனைகளில் இருந்தும் மின்சார பஸ்களை இயக்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அரசு விரைவு பஸ்களில் கட்டணம் குறைவு என்பதால் அரசு விரைவு பஸ்களில் குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களில் ஏராளமானோர் தற்போது முன்பதிவு செய்து வருகிறார்கள்.
    • சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் மொத்தம் 100 ஏ.சி வசதி கொண்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    போரூர்:

    கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, பெங்களூர், புதுச்சேரி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் மொத்தம் 329 குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள் உள்ளன.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களில் எதிர்பார்த்த அளவுக்கு பயணிகள் முன்பதிவு நடக்கவில்லை. மேலும் பயணிகள் எண்ணிக்கை குறைந்து இருந்ததால் தேவைக்கு ஏற்ப மிகவும் குறைந்த அளவில் மட்டுமே குளிர் சாதன வசதி கொண்ட பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் தற்போது கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. மேலும் பள்ளிகளுக்கு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டு உள்ளதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கி உள்ளனர். வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களில் பயணம் செய்ய தற்போது அதிகம் பேர் ஆர்வம் காட்டி வருகின்றனர். தனியார் ஆம்னி பஸ்களை விட அரசு விரைவு பஸ்களில் கட்டணம் குறைவு என்பதால் அரசு விரைவு பஸ்களில் குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களில் ஏராளமானோர் தற்போது முன்பதிவு செய்து வருகிறார்கள்.

    பயணிகள் கூட்டம் அதிகரித்து வருவதால் அரசு விரைவு குளிர்சாதன பஸ்கள் இப்போது முழு அளவில் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, கோடை காலத்துக்கு முன்பு வரை குளிர்சாதன பஸ்களில் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லை. முன்பதிவும் அதிகம் இருக்காது.

    ஆனால் தற்போது கோடை வெயில் தாக்கம் அதிகம் உள்ளதால் பலர் குளிர்சாதன பஸ்களில் செல்ல ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் குளிர்சாதன வசதி கொண்ட அரசு விரைவு பஸ்களில் கூட்டம் அதிகரித்து உள்ளது. முன்பதிவும் முழுஅளவில் இருப்பதால் 329 பஸ்களும் முழுவதும் இயக்கப்படுகிறது என்றார். இதேபோல் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் மொத்தம் 100 ஏ.சி வசதி கொண்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    கோயம்பேடு - சிறுசேரி, பாரிமுனை - வண்டலூர், கோயம்பேடு- கேளம்பாக்கம், தி.நகர்- கேளம்பாக்கம் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் தினசரி இயக்கப்பட்டு வரும் ஏ.சி பஸ்களும் இதுவரை குறைந்த அளவில் மட்டுமே இயங்கி வந்தது.

    இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து ஏ.சி பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது இதையடுத்து தற்போது முழு அளவில் அனைத்து மாநகர ஏ.சி பஸ்களும் மீண்டும் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    ×