என் மலர்
நீங்கள் தேடியது "கல்லூரியில் ரத்ததான முகாம்"
- 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டர்
- மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினர்
வேலூர்:
வேலூர் கணாதிபதி துளசி'ஸ் ஜெயின் பொறியியல் கல்லூரியில், ரத்ததான முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் ரோட்ராக்ட் குழுமம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த முகாமினை கல்லூரின் முதல்வர் பாரதி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
ரத்ததான முகாமில் வேலூர் சி.எம்.சி மருத்துவமனை மருத்துவர் செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப வியலாளர்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் ரோட்ராக்ட் குழுமத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் அனைத்து துறையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர்.
விழாவின் முடிவில் தொடர் ரத்ததானம் வழங்கி வரும் ரோட்ராக்ட் குழுமத்தின் மாணவர்களை பாராட்டி சிறப்பிக்கும் வகையில் ரோட்ராக்ட் குழுமத்திரும் மாணாக்கர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கினர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ரோட்ராக்ட் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் துரை குமார், துறைத்தலைவர், தகவல் தொழில்நுட்பத்துறை ஏற்பாடு செய்திருந்தார்.






