என் மலர்
நீங்கள் தேடியது "பெட்டிக்கடையில் மது"
- ரோந்து பணியில் சிக்கினார்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஜோலார்பேட்டையில் உள்ள பார்சம்பேட்டை பகுதியில் பாபு நகர் பகுதியை சேர்ந்த குமார் (வயது 54) என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
அவரது கடையில் அரசு அனுமதி இன்றி மது அருந்த இடம் கொடுப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது குமாரின் பெட்டிக்கடையில் மது சிலர் மது அருந்தியது தெரிந்தது. பின்னர் குமாரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






