என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குரு பெயர்ச்சி விழா"

    • ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் யாக வேள்வி மற்றும் பூஜைகளை நடத்தி வைத்து ஆன்மிக சொற்பொழிவாற்றினாா்.
    • பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது

    பல்லடம்:

    பல்லடம் அருகே சித்தம்பலம் கிராமத்தில் உள்ள நவகிரக நாயகா் கோளறுபதி சிவன் ஆலயத்தில் சோபகிருது வருட குருப்பெயா்ச்சி லட்சாா்ச்சனை திருவிழா மகாயாகம், 1008 தீா்த்த கலச அபிஷேகம் ஆகியன நடைபெற்றன.கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் யாக வேள்வி மற்றும் பூஜைகளை நடத்தி வைத்து ஆன்மிக சொற்பொழிவாற்றினாா்.

    யாக சாலை வேள்வியில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட கங்கா தீா்த்த கலசத்தை பக்தா்கள் பெற்று நவகிரக கோட்டையினுள் அமைந்துள்ள தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள குருபகவானின் பொற்பாதங்களுக்கு தாங்களே தீா்த்த அபிஷேகம் செய்து வழிபட்டனா். பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    ×