என் மலர்
நீங்கள் தேடியது "மனைவிக்கு அரிவாள் வெட்டு"
- விஜயாவின் நடத்தையில் சந்தேகம் பட்டு அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
- தனது மனைவி என்று கூட பார்க்காமல் விஜயாவை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கொண்டசாமனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மார்கண்டன். கூலி தொழிலாளியான இவரது மனைவி விஜயா (வயது33). இவர்களுக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இவர்கள் சொந்தமாக பசுமாடு வளர்த்து வந்துள்ள னர்.
இந்த நிலையில் மார்கண்டனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் வளர்த்த பசுமாட்டை மனைவிக்கு தெரியாமல் கணவர் விற்பனை செய்துள்ளார்.இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் அந்த பசுமாட்டை வாங்கியவரிடம் இருந்து விஜயா மீட்டு வந்தார்.
மேலும் விஜயாவின் நடத்தையில் சந்தேகம் பட்டு அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபித்து கொண்டு மார்கண்டன் கடந்த ஒருவாரமாக வீட்டிற்கு வரவில்லை.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் மதுபோதை யில் இருந்த மார்கண்டன், மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் தனது மனைவி என்று கூட பார்க்காமல் விஜயாவை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் அவருக்கு 20 இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டு ள்ளது. இதனால் அவர் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதற்குள் மார்கண்டன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். பின்னர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த விஜயாவை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பாலக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதி பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான மார்கண்டனை தேடி வருகின்றனர்.
மதுபோதையில் கூலி தொழிலாளி, மனைவி என்று கூட பார்க்காமல் வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






